மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி ஸ்பெஷல்: எந்தெந்த நடிகரின் படங்கள் தீபாவளி நாளில் திரையரங்குகளில் வெளியாகின்றன தெரியுமா.?
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவரது நினைவில் முதலில் வருவது புத்தாடை மற்றும் பட்டாசுடன் ஏதே ஒரு படம் குடும்பத்துடன் பார்ப்பது. சிலர் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்து தீபாவளியை கொண்டாடுவர்.
அப்படியாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை நாளில் எந்த நடிகரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன என்பதை இங்கு பார்ப்போம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, பவா செல்லதுரை ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வருகின்ற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அதேபோல் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் வருகின்ற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.