பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்!!



famous-kannada-actor-vijay-raghavendras-wife-died

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான விஜய் ராகவேந்திரா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நினகதி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று அந்த ஆண்டில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 

விஜய் கடந்த 2007 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நடன கலைஞரான ஸ்பந்தனா பல தொலைக்காட்சிகளில் நடைபெறும் டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Raghavendra

இந்நிலையில் விஜய் ராகவேந்திரா மனைவி மற்றும் மகனுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு திடீரென ஸ்பந்தனாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்பந்தனா உயிரிழந்துள்ளார். இவரது திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.