#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படவாய்ப்பு தருவதாக மைனர் பெண்ணை ஏமாற்றி பலாத்காரம்.. பிரபல இயக்குனர் கைது.!
மலையாளத்தில் கடந்த மே மாதம் "பைனரி" என்ற படம் வெளியானது. இப்படத்தை ஜாசிக் அலி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறி மைனர் பெண் ஒருவரை ஜாசிக் அலி கடத்திச் சென்றார் என்றும், தொடர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிலநாட்களாக இயக்குனர் ஜாசிக் அலி தலைமறைவாகி விட்டார் எனவும், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோயிலாண்டி போலீசார் பல இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவின் நடக்கவு என்ற பகுதியில், ஒரு தனி வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த ஜாசிக் அலியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்செய்தி மலையாள திரையுலக வட்டாரத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.