மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல வில்லன் நடிகருக்கு திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படம்!
பொதுவாக சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றாலே சமூக வலைத்தளங்களில் அது பிரபலமாகிவிடும். ஆனால் சத்தமே இல்லாமல் நடந்துள்ளது ஒரு சினிமா பிரபலத்தின் திருமணம்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ஹரிஷ் உத்தமன். தொடரி, பைரவா என தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அவருக்கும் அமிர்தா கல்யாண் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டனர்.