ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
உற்சாகத்தின் உச்சத்தில் கணேஷ் வெங்கட்ராம்- நிஷா ஜோடி!! வெளியான அழகிய பொக்கிஷ புகைப்படம் !!
தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.
இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன் தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டார். மேலும் இறுதி நிலை வரைக்கும் சென்ற அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். நிஷா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு உதாரணமாக மிக அழகிய காதல் ஜோடியினராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கணேஷ் நிஷா கர்ப்பமாக இருந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நிஷாவிற்கு இன்று காலை அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. அதனை மிகுந்த உற்சாகத்துடன் கணேஷ் வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
An Everlasting & unbreakble bond 💞
— Ganesh Venkatram (@talk2ganesh) June 29, 2019
My Beautifl lil Princess is hre👸@Nishaganesh28 deliverd a beautiful baby girl tdy at 7.29am 29 June exactly a day aftr her bday ♥️
Both mom & baby r perfectly healthy, ws a normal delivery!
Tnk u so much fr keepng us in ur prayers🙏🏻😊 pic.twitter.com/gl2ZEmmwyF