#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"கவுண்டமணியின் 'அழகுமணி'யா இது?!" அட என்று வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!
1990 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் காமெடி என்றால் கவுண்டமணி - செந்தில் ஜோடி தான் எனும் அளவுக்கு அந்தக் காலத்தில் கோலோச்சியவர்கள் இவர்கள். கவுண்டமணி - செந்தில் ஜோடி இருக்கிறதென்றால் அந்தக் காலத்தில் அந்தப் படம் கண்டிப்பாக ஹிட்டாகி விடும்.
இன்று புதிதாக எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும், இன்றும் கூட கவுண்டமணி - செந்தில் நடித்த படங்களின் காமெடி காட்சிகள் அனைவரும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. அதே போல் அப்போதைய முன்னணி ஹீரோவான சத்யராஜ் நடிக்கும் படத்தில் எல்லாம் கவுண்டமணியும் இருப்பார்.
அந்தப் படங்களின் காமெடிகள் எல்லாம் காலங்கள் கடந்தும் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் "மகுடம்" திரைப்படம். அந்த படத்தின் காட்சியில் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கவுண்டமணியிடம் கொடுத்து தான் தன் தங்கை என்று செந்தில் கூறுவார்.
திருமண மேடையில் காதல் கனவுகளுடன் இருக்கும் அவரிடம் 'மாப்பிள்ளை உங்க அழகுமணி வந்திருக்கு' என்று கூற, புகைப்படத்தை பார்த்துக்கொண்டே பெண்ணை பார்க்கும் காட்சி இன்றளவும் ரசிக்கப்படுகிறது. அதில் அழகுமணியாக நடித்தவர் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.