ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"அமிர்தசரஸ் தங்க கோவிலில் கணவருடன் ஹன்சிகா!" வைரலாகும் புகைப்படங்கள்!
ஹிந்திப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் 2007ஆம் ஆண்டு "தேசமுதுரு" என்ற தெலுங்குப் படத்திலும், 2010ஆம் ஆண்டு "மாப்பிள்ளை" படத்தில் நடித்து தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சொஹைல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.
மேலும் இந்த ஆண்டு மைத்திரி மற்றும் நாசா என்ற வலைத்தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் தற்போது தனது கணவர் சொஹைல் கதூரியாவுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார் ஹன்சிகா மோத்வானி. தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.