மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை தனியா விட்டுட்டு போயிட்டானே.! போண்டா மணியின் உடலை பார்த்து கதறிய நண்பர்.!
மறைந்த பிரபல நடிகர் போண்டாமணியின் உடலுக்கு நடிகர் முத்துக்காளை, பெஞ்சமின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.நடிகர் போண்டாமணி பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களோடு இணைந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில் பிச்சைக்காரன் வேடத்தில் இவர் நடித்தது பிரபலமாக பேசப்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் இவர் நடிப்பதற்கு முன்னர் அந்த இயக்குனர் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்க தயாரா? இதில் நடித்தால் எங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு போண்டாமணி நிச்சயம் இதில் நான் நடிக்கிறேன் என தெரிவித்தார் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான், அவருக்கு சமீப காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மருத்துவர்கள் தரப்பில் அவருக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஓய்விலிருந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான், நடிகர் முத்துக்காளை மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டோர் மறைந்த நடிகர் போண்டாமணியின் இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நடிகர் பெஞ்சமின் போண்டாமணி உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது பேசிய பெஞ்சமின்,
வெளிநாடு போயி சிகிச்சை எடுப்பதற்காக 3 நாள் முன்புதான் பாஸ்போர்ட் எடுத்தான். இப்படி தனியா விட்டுவிட்டு போய்விட்டான் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் மறைந்த நடிகர் போண்டாமணியின் குடும்பத்திற்கு நடிகர்கள் யாராவது பண உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது.