மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி பிரியங்காவா இது! ஹீரோயின் ரேஞ்சுக்கு வேற லெவலில் கெத்து காட்டுறாரே! வைரல் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் சிரித்த முகத்துடன், மிகவும் கலகலப்பாக ஏராளமான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தவர் தொகுப்பாளினி பிரியங்கா. மாகாபாவுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
பிரியங்கா விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். அங்கு அவர் தனது கோபத்தால், சில செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று இரண்டாவது இடத்தை பெற்றார். பின்னர் பிக்பாஸில் இருந்து விலகிய அவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா கடந்த மாதம் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டநிலையில் அது வைரலானது.
தொகுப்பாளினி பிரியங்கா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். மேலும் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கும் அவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.