என்ன நண்பா? பர்ஸ்ட் லுக்கா? தளபதி 65 படக்குழு வெளியிட்ட செம மாஸான அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!



httpscinemamaalaimalarcomcinemacinemanews20210618183128

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் தளபதியாக வலம்வரும் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இதற்கு முன் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியவர். இது தளபதியின் 65வது திரைப்படமாகும். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அவர்களுடன் யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றனர். மேலும்  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.

மேலும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தற்போது அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 22-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் அதன் ட்ரீட்டாக ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இதற்கான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.