மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. இசைஞானி இளையராஜாதானா இது! செம மாடர்னாக எவ்ளோ ஸ்டைலாக இருக்காரு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசைமைத்து இசைஞானியாக, அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அனைவராலும் விரும்பக்கூடிய முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் இளையராஜா. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த இசையமைப்பாளராக விளங்கிவரும் அவர் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா என்றாலே முதலில் நமது நினைவிற்கு வருவது வெள்ளை வேஷ்டி, ஜிப்பாதான். எங்கு சென்றாலும் அவர் அதே மாதிரியான உடையில் தான் செல்வார்.
இந்த நிலையில் இளையராஜா வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது பாரீஸில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவரது மகனான யுவன் சங்கர்ராஜா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேண்ட், கோட், கேப் என செம ஸ்டைலாக உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் இசைஞானி இளையராஜாவா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.