மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய படங்களை திரையிட தடை விதித்த அரசு.. எந்த நாட்டில் தெரியுமா.?
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு போன்ற மொழி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். திரைப்படத்திற்கு பிறகு ஓம் ராவத் இயக்கிய 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்
இந்த திரைப்படம் கடந்த 16ஆம் தேதியன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியானது. மேலும் இப்படத்தின் வித்தியாசமான விளம்பர தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 'ஆதிபுரூஸ்' திரைப்படம் நேபாளம் நாட்டில் திரையிட திட்டமிடப்பட்டு வந்தது. இப்படத்தின் சில காட்சிகளில் வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் நேபாள நாட்டு மேயர் பலேந்திர ஷா சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டார்.
அவர் கூறியதாவது, "ஆதிபுருஷ் திரைப்படத்தில் சீதா இந்தியாவின் மகள் என்று கூறப்பட்டிருக்கிறது. நேபாள நாட்டில் சீதை அந்நாட்டு மகள் என்று நேபாள மக்கள் கருதி வருகின்றனர் என்பதால் நேபாள நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக இப்படம் இருக்கும். இதனால் இந்த திரைப்படத்தை திரையிட மறுக்கப்பட்டது. மேலும் ஒட்டுமொத்த இந்திய படங்களை நேபாள நாட்டில் திரையிட தடை விதித்தது நேபாள அரசு. இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.