மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடர்ன் உடையில் கலக்கும் பிக்பாஸ் ஜனனி.! கியூட்டா இருக்காங்களே.! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த 6வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதில் பல்வேறு துறையை சேர்ந்த 20 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் நாளே ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் ஜனனி. 21 வயது நிறைந்த இவர் மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் உள்ளார்.
ஜனனி நடிகையாக வேண்டும் என்ற கனவோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். யூடியூப்பில் இவரது வீடியோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் ஜனனி மாடர்ன் உடையில் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.