திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட நம்ம ஜெயம் ரவியா இது இப்படி இருக்கிறாரே... லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பொன்னியின் செல்வன் 2, அறைவன், அகிலன், ஜன கன மண போன்ற படங்கள் இவர் நடிப்பில் தயாராகி வருகின்றன. அதுமட்டுமின்றி அண்மையில் இவர் ஒரு கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் கோடியில் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அட ஜெயம் ரவியா இது இப்படி உள்ளாரே என ஷாக்காகி வருகின்றனர்.