மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயவுசெஞ்சு இதை மட்டும் செய்யாதீங்க! தனது ரசிகர்களுக்கு நடிகர் ஜெயம் ரவி என்ன வேண்டுகோள் விடுத்துள்ளார் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பூமி என்ற படத்திலும் அதனை தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், ஜன கன மன போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
நடிகர் ஜெயம் ரவிக்கு வரும் செப்டம்பர் 10-ம் தேதி பிறந்தநாள். இந்நிலையில் அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தயாராகியுள்ளனர். இதனிடையே தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நடிகை ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.
To my dear #JRfans 🤍 pic.twitter.com/maqyZBziJp
— Jayam Ravi (@actor_jayamravi) August 24, 2020
உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைச் சிறப்படையச் செய்கிறது. ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை.
கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம்" என்று கூறியுள்ளார்.