மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது... நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளாரா...இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்.!
இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.
இந்நிலையில்தான் நடிகர் ராம்சரணுடன் இணைந்து மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து அவர் பெருமளவில் பிரபலமானார்.தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். பின்னர் திடீரென படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.
தற்போது சமூக வலைதளத்தில் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் காஜல் கர்ப்பமாக உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் காஜல் அகர்வால் - கவுதம் கிச்சலு தம்பதி இன்னும் தங்களின் முதல் குழந்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.