கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்! மாபெரும் முக்கிய பிரபலத்தின் சிலை திறப்பு!! வெளியான உற்சாக தகவல்!!



kamalhaasan-birthday-celebration

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். அவர் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தநிலையில் தற்போது அவரது திரைப்பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ளது. 
 
 மேலும் நடிகர் கமல் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவந்தார். பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது அதனை முன்னிட்டு நவம்பர் 7 முதல் 9 வரை 3 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்த உள்ளது.

KAMAL HAASAN 

 இந்நிலையில் இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமலின் தந்தையின் திருவுருவச் சிலையை பரமக்குடியில் கமல்ஹாசன் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினரை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் அதனை தொடர்ந்து 8ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் திருவுருவச் சிலையை கமல் திறந்துவைக்க உள்ளார். பின்னர் 9-ம் தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியுடன் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடைபெறும். இவ்விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.