மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை கனிகாவிற்கு இப்படியொரு துயரமா? கண்ணீர் மல்க வேதனையோடு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கனிகா.
இவர் சில வருடங்களுக்கு ,பின்பு திருமணமாகி தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறினார்.அங்கு அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அவரது குழந்தை குறித்து அதிர்ச்சிமிக்க தகவலை நடிகை
கனிகா தெரிவித்துள்ளார்.
அதில் கனிகாவின் குழந்தை ரிஷி பிறக்கும்போதே இதயத்தில் பிரச்னையுடன் பிறந்துள்ளன. அதனால் பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தையை மருத்துவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அது தோல்வியில் முடிந்தால் குழந்தை உயிர் உயிர் பிழைப்பது கடினம் எனவும் வெற்றியடைந்தால் குழந்தை சில ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பான் எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இதற்கிடையே குழந்தையின் உயிர் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை எனவும், குழந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் தொடர்பில்லை எனவும் எழுதி வாங்கியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து குழந்தை ரிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 50-வது நாள் முதன் முறையாக கனிகாவுக்கு குழந்தையை பார்க்க அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து தற்போது 8 வயதாகும் தமது மகனின் உடம்பில் அறுவைசிகிச்சை தந்த தளும்புகள் ஏராளமாக இப்போதும் உள்ளது என கனிகா கண்ணீர் மல்க கூறியுள்ளார் .