மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை மிஸ் செய்த கண்ணம்மா! அதுவும் எந்தெந்த படங்கள் பார்த்தீங்களா! ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மாவாக, ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிபிரியன். இந்த தொடரில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்து இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த நிலையில் திடீரென சில காலங்களுக்கு முன்பு ரோஷனி பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகினார்.
மேலும் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக வருவதாகவும், அதனாலேயே அவர் தொடரை விட்டு விலகியதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் வெளிவந்த கதாநாயகிகளின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்கள் சார்பட்டா பரம்பரை மற்றும் ஜெய்பீம். இதில் சார்பட்டா பரம்பரை படத்தில் துஷாரா விஜயன் நடித்த மாரியம்மாள் கதாபாத்திரம் மற்றும் ஜெய்பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்த செங்கேனி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டப்பட்டது.
இந்த இரு வாய்ப்புகளுமே முதலில் கண்ணம்மா ரோஷினிக்குதான் வந்துள்ளது. ஆனால் அப்பொழுது அவர் சீரியலில் கவனம் செலுத்தி வந்ததால் நடிக்க முடியவில்லையாம். ஆனால் இதற்காக படங்கள் வெளிவந்த பிறகு அவர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இனியும் வரும் சினிமா வாய்ப்புகளை விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவர் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.