திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதன் முறையாக.. ஹீரோயின் வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகை குஷ்பூ.! அதுவும் யாருக்கு ஜோடியாக பார்த்தீர்களா.!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து எக்கசக்கமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.மேலும்
இவரது உயிருக்குயிரான ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவமெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறியது.
நடிகை குஷ்பூ நடிகரும், இயக்குனருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குஷ்பு அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது உடல் எடையை பல மடங்கு குறைத்து செம ஸ்லிம்மாக மாறினார். இந்த நிலையில் அவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
அதாவது 80ஸ்களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சில்வர் ஜூப்ளி ஸ்டார் மைக் மோகன் மீண்டும்,ஹீரா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கும் இந்தப் படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்தாலும் இருவரும் இணைந்து நடித்ததில்லை.