மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் ஸலாம் படத்தில் இடம்பெற்றுள்ள தேர் திருவிழா பாடல் வெளியீடு: லிங்க் உள்ளே.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.
படத்தை லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்றிருந்தது.
தற்போது படம் வெளியீடுக்காக தயாராகி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் ரஜினிகாந்தின் டீசர் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள தேர் திருவிழா என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் வெளியான 5 மணிநேரத்தில் 6 இலட்சம் பார்வையாளர்களை கடந்து, யூடியூப் ட்ரெண்டிங்கில் 7வது இடத்தில் இருக்கிறது.