திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பம்பை உடுக்கை கலைஞரின் மகளுக்கு சினிமாவில் வாய்ப்பு தரும் இமான்!"
விழுப்புரத்தைச் சேர்ந்த பம்பை உடுக்கை கலைஞர் ராஜ்குமார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மணம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது இளைய மகள் தர்ஷினி, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது தந்தையைப் போலவே நாட்டுப்புற பாடல்களில் விருப்பம் கொண்ட இவர், நன்றாக பாடவும் செய்வார். இதையறிந்த தர்ஷினியின் ஆசிரியர் ஒருவர், தர்ஷினியை இசைப்பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டார். இந்நிலையில் வீட்டின் அருகில் தர்ஷினி பாடிய வீடியோ ஒன்று வைரலானது.
தர்ஷினியின் ஊரைச் சேர்ந்த இளைஞர் தர்ஷினி பாடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இருந்த அந்தப் பாடலை, தர்ஷினி மிகவும் உருக்கமாகப் பாடியிருந்தார்.
இந்நிலையில், அந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் டி. இமான், தர்ஷினியின் தந்தையைத் தொடர்பு கொண்டு, திரைப்படங்களில் பாடுவதற்கு தர்ஷினிக்கு வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இமான் பாட வாய்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.