"நாயகன் படத்திற்குப் பிறகு கமல்-மணிரத்னம் இணைந்து பணியாற்றாததற்கு தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமா?!"



Latest news about  kamal and manirathnam

1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் "நாயகன்". மும்பையில் தாதாவாக இருந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 1988ம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

kamal )), 

இதையடுத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்-மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு "தக் லைஃப்" என்று பெயரிடப்பட்டுளளது. இப்படத்தின் டீசர் மற்றும் தலைப்பு சமீபத்தில் வெளியானது. அதில் துல்கர் சல்மான் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், 1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்குப் பிறகு கமலும், மணிரத்னமும் வேறு படத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை.

kamal

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இருவரும் வெவ்வேறு பார்வை மற்றும் தனிப்பட்ட விஷயங்களை பின்பற்றுபவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள்  இருந்ததாகவும் கூறப்படுகிறது.