#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிடிச்ச டிரேஸ் கூட போட முடில., ஏன் இப்படிலாம் பண்றீங்க? - உருவக்கேலி செய்ததால் மனமுடைந்து பேசிய பிரபல நடிகை..!!
மனதளவில் காயப்படுத்துவதை யாரும் செய்ய வேண்டாம் என நடிகை கோரிக்கை வைத்தார்.
மலையாளம், தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியான படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஹனிரோஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழில் இவர் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் உருவகேலி தன்னை காயப்படுத்தியதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "விழாக்களுக்கு செல்கையில் எந்த மாதிரியான உடையில் வரவேண்டும் என்பது அவரவரின் விருப்பத்தல் ஒன்றாகும்.
இது தனிப்பட்ட உரிமை கூட. பிரபலங்கள் தாங்கள் விரும்பும் உடையை அணிய சுதந்திரம் வேண்டும். ஒருவருக்கு உடல் எடை கூடிவிட்டால் உருவகேலி செய்யும் நடைமுறையில் மாற்றம் வேண்டும்" என தெரிவித்தார்.