பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நள்ளிரவில் நடிகை ஆண்ட்ரியாவிற்கு பிரபல திகில் இயக்குனர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! என்னனு பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார்.
மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இயக்குனர் மிஷ்கின் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிசாசு 2 படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. மேலும் தற்போது படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பெரும் செட் போட்டு நடைபெற்று வருகிறது.
Let’s light the candle and celebrate the special day of our protagonist Andrea. @andrea_jeremiah
— Mysskin (@DirectorMysskin) December 20, 2020
Happy birthday and wishing you a long creative life.
-Mysskin #pisasu2@Lv_Sri @Rockfortent @kbsriram16 @PRO_Priya pic.twitter.com/8N366Hs2gD
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் நள்ளிரவில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.