#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவி மௌனராகம் சொர்ணா இம்புட்டு அழகா? வைரலாகும் புகைப்படம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ, சீரியல்கள் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மௌன ராகம் சீரியல். சக்தி என்ற பெண் குழந்தையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
இந்த கதையில் சக்திக்கு அத்தையாக சொர்ணா என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடித்திருப்பார். கிராமத்தை பின்னணியாக கொண்டு, மேக்கப் எதுவும் இல்லாமல், மிகவும் சாதாரண தோற்றத்தில் இருப்பார்.
அவரது உண்மையான பெயர் சீமா G நாயர். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பல்வேறு படங்கள், சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மௌன ராகம் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் இவரின் மேக்கப் அணிந்த தோற்றம் பார்த்து ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.
மௌன ராகம் சொர்ணாவா இது? என்று கேட்கும் அளவுக்கு அந்த மிகவும் வித்தியாசமாக உள்ளார் சீமா G நாயர். இதோ அவரது புகைப்படம்.