Mr.லோக்கல் திரைப்படம் வெற்றியா? தோல்வியா? இதோ படத்தின் திரை விமர்சனம்!



mrlocal-tamil-movie-review

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உச்சத்தை தொட்டுவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, தம்பை ராமையா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான Mr லோக்கல் திரைப்படத்தின் விமர்சனம் குறித்துதான் தற்போது பார்க்க உள்ளோம்.

கதை:
படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் ஒரு கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவ்ருடன் நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் வேலை செய்கின்றனர். சிவகார்திகேயனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் ராதிகா. ராதிகாவுக்கு ஒரு டிவி சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. தாயின் ஆசையை நிறைவேற்ற அந்த டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார் சிவா.

Mr Local

டிவி நடிகையை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு செல்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு நாயகி நயன்தாரவை சந்திக்கிறார். அந்த டிவி நடிகையின் தொடரை தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளராக உள்ளார் நயன்தாரா. இந்த நிலையில் சிவகார்த்திகேயன்கும், நயன்தாராவிற்கு முதல் சந்திப்பே மோதலில் முடிகிறது. இதனால் அந்த டிவி நடிகைக்கு பிரச்சனை எழுகிறது.

Mr Local

பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது. இப்படி பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் மோதல் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு காதலை ஏற்படுத்துகிறது.

மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பலம்:
சிவகார்த்திகேயன் தனக்கே உரித்தான பாணியில் தனது நடிப்பு, டைலாக் டெலிவரி என அசத்தியுள்ளார். அதேபோல் ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்பும் மிக அருமை. சதிஷ், ரோபோ சங்கர், யோகிபாபு என அனைவரும் காமெடியில் கலக்கியுள்ளனர். தம்பி ராமையா தனக்கே உரித்தான நடிப்பில் அசத்தியுள்ளார். படத்தின் இயக்குனர் ராஜேஷ் தனது பாணியில் மீண்டும் ஒரு அசத்தலான நகைச்சுவை படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

Mr Local

பலவீனம்:
படத்தின் திரைக்கதை சற்று தொய்வாக உள்ளது மிகப்பெரிய பலவீனம். அதேபோல், சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு என பல்வேறு நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கான நகைச்சுவை பகுதி குறைவாகவே உள்ளது. நகைச்சுவையில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஆதியின் பிண்ணனி இசை சூப்பர். படத்தின் பாடல்களும் அருமையாக உள்ளது. இந்த சம்மரை குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்று கழிக்க Mr . லோக்கல் ஒரு அருமையான பொழுதுபோக்கு படம்.