மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்! என்னவொரு நெருக்கம்! தனது காதலியின் பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடிய முகேன்! வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில், பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை வென்று முதல் இடம் பிடித்தார்.
மலேசியாவை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்டார். அது மட்டுமின்றி நடிகை அபிராமியுடன் காதல் சர்ச்சையில் சிக்கி, பின்னர் அதில் இருந்து மீண்டு வெற்றியாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
முகேன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே தான் நதியா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், அவர் ஒரு நடிகை மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் செய்து வருகிறார் எனவும் கூறியிருந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தனது காதல் குறித்து அவர் எதுவும் பேசவில்லை.
இந்நிலையில் தற்போது முகேன், நதியாவின் பிறந்தநாளை அவருடன் ஒன்றாக இருந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். மேலும் இருவரும் ஒரே மாதிரியான மஞ்சள் நிற உடையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு முகேன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலைக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.