மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகேனுக்கு என்னவாச்சு.! ஏன் இப்படி துடிக்கிறார்.. வைரலாகும் நீக்கப்பட்ட காட்சி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் மட்டுமே இறுதிக்கட்ட போட்டியாளர்களாக கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.அதனையும் அனைவரும் முழு மூச்சுடன் போராடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் முகேன், சாண்டி மற்றும் கவின் உடல் முழுவதும் வெளியே தெரியாதவாறு முழுவதும் பாலிதீன் பேப்பரில் சுற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து அறைக்குள் போடப்பட்ட ஒரு வட்டதிற்குள் உருண்டு சென்று எழுந்து நிற்கவேண்டும்.
இந்நிலையில் பாலிதீன் பேப்பர் உடலில் இறுக்கமாக சுற்றியிருந்ததால் முகேனின் உடலில் அலர்ஜியும், வலியும் ஏற்பட்டுள்ளது. இந்த காட்சி டிவியில் ஒளிபரப்பு செய்யாதநிலையில் நீக்கப்பட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.