#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாருக்காகவும் இதை மட்டும் செய்ய மாட்டேன்!. அது மட்டும் என்னால முடியவே முடியாது ஓப்பனாக பேசும் மும்தாஜ்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில்வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு எந்த அளவிற்கு உண்மை என்பதை சோதிக்கும் டாஸ்குகள் தரப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல பிறருக்காக உதவும் தியாக உள்ளம் யாருக்கெல்லாம் இருக்கிறது என மக்களுக்கு காட்ட தான் இந்த டாஸ்குகள் கொடுக்கபடுகிறது.
இதில் ஏற்கனவே பாலாஜி ஜனனிக்காக மொட்டை அடித்து கொண்டார். மும்தாஜுக்காக விஜயலஷ்மி சாணியில் முங்கி எழுந்திருக்கிறார். ரித்விகா விஜயலஷ்மிக்காக கைகளில் நிரந்தமாக பிக் பாஸ் லோகோவை பச்சை குத்தி கொண்டிருக்கிறார் இவ்வாறு ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.
ஐஸ்வர்யா சென்றாயனுக்காக தன் கூந்தலை வெட்டி கொண்டார். அதே போல சென்றாயன் ஐஸ்வர்யாவுக்காக தலைமுடியை கலர் செய்திருக்கிறார். யாஷிகாவுக்காக ஜனனி புருவத்தை கலர் செய்து கொண்டிருக்கிறார். உள்ளே இது நாள் வரை அழகாகவே இருந்து வந்த போட்டியாளர்களை இந்த டாஸ்க் மூலம் அங்கு இருப்பவர்கள் அனைவரும் மாறுபட்டுள்ளனர்.
மும்தாஜுக்கு இப்போது டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். தனது தலைமுடியை மும்தாஜ் பச்சை நிறத்தில் கலர் செய்து கொள்ள வேண்டும் என்று ரித்விகா கேட்டுகொண்டுள்ளார்.
எனக்காக இதை செய்வீங்களா என ரித்விகா கேட்டதற்கு என் அம்மாவுக்காக கூட நான் இதை செய்ய மாட்டேன். என்னால முடியவே முடியாது என கூறி மறுத்திருக்கிறார் மும்தாஜ். இதனால் தொடந்து அவரை கன்வின்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ரித்விகா.
மற்ற போட்டியாளர்கள் செய்த டாஸ்குகளை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது, மும்தாஜ் இதை செய்ய மறுப்பது நியாயம் இல்லை தான். சாணியில் மும்தாஜுக்காக விஜயலஷ்மி மூழ்கியதை நினைத்து பார்த்தாவது மும்தாஜ் ரித்விகாவிற்கு உதவி இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் என்ன செய்ய போகிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும். இந்த விசயம் அனைவராலும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.