#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா ! நம்ம வீட்டு பிள்ளையின் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் இவ்வளவு வரவேற்பா? மாஸ் சாதனையால் செம உற்சாகத்தில் இமான்!!
மிஸ்டர் லோக்கல் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயனின் 16 வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் மற்றும் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
மேலும் படம் வெளியிடுவதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தநிலையில் இப்படத்தின் உன்கூடவே பொறக்கணும் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை இசையமைப்பாளர் இமான் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
It's One Million+ views for the mesmerizing #UnkoodavePorakkanum lyric video!#UnkoodavePorakkanum1Mviews pic.twitter.com/eVFSZmzLV8
— D.IMMAN (@immancomposer) September 12, 2019