மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அட நம்ம நாட்டாமை டீச்சரா இது" வயசானாலும் கவர்ச்சி குறையல.. ரசிகர்கள் கமெண்ட்.!
கோலிவுட் திரையுலகில் 1994 ஆம் வருடம் வெளியான திரைப்படம் 'நாட்டாமை'. கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் திரையிடபட்ட இப்படத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம் ஆகியோர் நடித்திருந்தனர்.
சரத்குமார் இரு வேடத்தில் நடித்த இப்படம் தெலுங்கில் வெளியான ' பெத்தராயிடு' படத்தின் மறு உருவாக்கமாகும். இபடத்தின் பாடல்கள் எல்லாம் அந்த காலகட்டத்திலேயே பெரிய ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டாமை படத்தில் சரத்குமார், ஒரு காட்சியில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டபட்டிருப்பார். இந்த காட்சியில் வரும் டீச்சர் கதாபாத்திரத்தில் வரும் பெண் அனைவருக்கும் மறக்க முடியாத வகையில் நடித்திருப்பார்.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் அவருடைய புகைபடம் வைரலாக பரவிவருகிறது. 'அட நம்ம டீச்சரா இது' என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் புகைபடத்தை ஷேர் செய்து வருகின்றனர்.