மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. அம்சமா இருக்காரே.! குழந்தை பிறந்த பிறகு அதை மாற்றிய நடிகை நயன்தாரா.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த “ஐயா” படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி பெருமளவில் புகழடைந்தார். தொடர்ந்து அவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா என அனைத்து பிரபலங்களுடனும் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். அவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் திருமணமான நான்கு மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் புதிய போட்டோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகு எந்த நாடுகளுக்கு சென்றாலும் மஞ்சள் கயிறுடன் இருந்து வந்த நடிகை நயன்தாரா தற்போது தாலி பிரித்து கோர்த்து செயினில் மாற்றியுள்ளார். இந்த நிலையில் கழுத்தில் தாலி செயின் நெற்றியில் குங்குமம் என அம்சமாக உள்ளார்.