மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. கதிரை கத்தியால் குத்திய ரவுடி கும்பல்.. கதறும் முல்லை..! பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை மையக்கருவாக வைத்து பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது அண்ணன் தம்பிகளில் கதிர்-முல்லை ஜோடி மட்டும் தனியே சென்று சாதனை படைக்க தயாராகிவிட்ட நிலையில், பிற மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
வாழ்க்கையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள கதிர்-முல்லை ஜோடி சமையல்போட்டியில் கலந்துகொண்டு அதில் வெற்றி பெறும் உழைப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு எதிராக செயல்பட சமையல் போட்டியில் கதாபாத்திரம் கொண்டுவரப்பட்ட நிலையில், அங்கு நடக்கும் சண்டையில் கதிரை கொலை செய்யமுயற்சி நடக்கிறது.
கதிரை தாக்குவதற்கு 10 பேர் கொண்ட கும்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து கதரின் அண்ணனான மூர்த்தி மற்றும் ஜீவா இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வீறுகொண்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோவின் இறுதியில் கதிர் மீது கத்தி பாய்ச்சப்படுவது போன்ற பிம்பத்துடன் காட்சி நிறுத்தப்படுகிறது. இதனால் அவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானாரா? அல்லது அதற்குள் அண்ணன் வந்து தம்பியின் உயிரை காப்பாற்றினாரா? என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.