மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. வேற லெவல்! வெறித்தனமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வீடியோ இதோ!!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாசம், கூட்டுக்குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே. சித்ரா. அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து காவியா முல்லையாக நடித்து வருகிறார். காவியா இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்தவர். பின்னர் முல்லையாக அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்து அவருக்கென ஏராளமான ரசிகர்களும் உருவாகினர்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவியா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் வேற லெவல்.. என பாராட்டி வருகின்றனர்.