மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாண்டியன் ஸ்டோர் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு! தீயாய் பரவும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்தத் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன், ஹேமா, காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் துவக்கத்தில் மிகவும் பிரபலமான மீனா கதாபாத்திரத்தில் கவிதா கவுடா என்பவர் நடித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கன்னடத்தில் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். கவிதா கவுடா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் சில கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் லக்ஷ்மி பிரம்மா எனும் சீரியலில் நடித்தபோது தன் உடன் நடித்த சந்தன்குமார் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கொரோனா தொற்று காரணமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.