மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாடா! ஆல் இஸ் வெல்.. நல்ல செய்தி சொன்ன வனிதா! வாழ்த்தும் ரசிகர்கள்!
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நெட்டிசன்களால் மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு பேசுப்பொருளானார்.
ஆனால் எதற்கும் அசராமல் தன்னை குறித்து தவறாக பேசும் அனைவருக்கும் வனிதா அசராமல் பதிலளித்து வருகிறார். மேலும் சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பீட்டர் பால் விரைவில் குணமடைந்து விடுவார் கவலைப்படாதீங்க என ஆறுதல் கூறி வந்தனர்.
All is well...back home..🙏
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 26, 2020
இந்நிலையில் தற்போது வனிதா ஆல் இஸ் வெல். வீட்டுக்கு வந்தாச்சு என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பீட்டர் பாலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீர்களா நல்லது என கூறிவருகின்றனர்.