மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கலுக்கு சன் டீவியில் என்ன படம் தெரியுமா? திரைக்கு வந்து சில மாதங்களே ஆன 5 பிரமாண்ட படங்கள்!
புத்தாண்டு என்றாலே அடுத்த சில நாட்களில் தமிழர்களின் தலையாய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வந்துவிடும். பொங்கல் என்றாலே புது உடை, கரும்பு, இனிப்பான பொங்கல் இவற்றுடன் சேர்ந்து புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.
அதேபோல, பண்டிகை நாட்கள் என்றாலே அணைத்து தொலைக்காட்சிகளும் புது புது திரைப்படங்களை ஒளிபரப்பி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பதும் வழக்கமான ஒன்றுதான். அதிலும் சன் தொலைகாட்சி என்றாலே மாலை 6.30 மணிக்கு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்ற ஏதாவது ஒரு பிரமாண்ட படத்தை போட்டு மக்களை கவர்ந்துவிடுவார்கள்.
ஒரு படம் என்றாலே மக்கள் மகிழ்ச்சியடையும் வேளையில் இந்த வருடம் தொடர்ந்து 5 நாட்கள், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட வெற்றிப்படங்கள் அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளது சன் டிவி.
அந்த வகையில், ஜனவரி 15 புதன் அன்று தளபதி நடித்த பிகில், ஜனவரி 16 வியாழன் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை, ஜனவரி 17 வெள்ளிக்கிழமை விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், ஜனவரி 18 சனிக்கிழமை தலையின் விஸ்வாசம், ஜனவரி 19 ஞாயிற்று கிழமை சூப்பர் ஸ்டாரின் பேட்ட ஆகிய 5 படங்களையும் 5 நாட்களுக்கு தினமும் மாலை 6 . 30 மணிக்கு ஒளிபரப்புகிறது சன் டிவி.