மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் 'பொங்கல்'; போட்டியில் இறங்கிய ரஜினி, தல ரசிகர்கள்!
தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் படையை கொண்டவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தல அஜித். இவர்களில் ஒருவரது படம் வெளியானாலே தமிழகத்தில் திருவிழா போல தான் இருக்கும். ஆனால் இருவரின் படங்களும் ஓரே நேரத்தில் வெளியானால் சொல்லவா வேண்டும்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இருவேடங்களில், மதுரை, கிராமத்து பிண்ணனியில் அஜித்தின் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் வரும் பொங்கல் தல பொங்கல் தான் என அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ரஜினியின் பேட்ட திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன்று உறுதி செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
பேட்ட படத்தின் வெளியீட்டை பற்றி கார்த்திக் சுப்புராஜ் ட்டுவிட்டரில் உறுதி செய்த சில நேரத்திலேயே, KJR studios "எல்லா ஏரியாலயும் மாஸ் ரிலீசுக்கு நாங்க ரெடி! பொங்கல அடிச்சுத் தூக்க நீங்க ரெடியா?" என குறிப்பிட்டு விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர்களை பற்றிய தகவலை பதிவு செய்தது.
சூப்பர் ஸ்டார் மற்றும் அஜித்தின் படங்கள் இரண்டுமே பொங்கலுக்கு உறுதியான செய்தியை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். "இந்த பொங்கல் தல பொங்கலா, பேட்ட பொங்கலா" மோதி பாக்கலாம் என்ற கருத்து மோதலில் இறங்க துவங்கிவிட்டனர் ரஜினி மற்றும் தல ரசிகர்கள்.
இவர்களின் இந்த மோதலால் Pongal என்ற வார்த்தை இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது. இந்த இரு தமிழ் திரைபிரபலங்களும் இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.