#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. கொல்றீயேமா! டாப் ஆங்கிளில் பேரழகியாக ஜொலிக்கும் டான் பட ஹீரோயின்!! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து இளம் அழகிய நடிகையாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருபவர் பிரியங்கா மோகன். இவர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் அசத்தலான நடிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல நடிகையாக வலம் வரும் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட், அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது கொள்ளை கொள்ளும் அழகில் பூ பறிப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.