#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இத்தனை வருஷம் சினிமாவில் நடிக்கணும்.! அடேங்கப்பா.. நடிகை ராஷி கண்ணாவுக்கு இப்படியொரு ஆசையா??
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனை தொடர்ந்து அவர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக், தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். ராஷி கண்ணா தற்போது சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ராஷி கண்ணா திரையுலகில் கால்பதித்து இதுவரை எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, எனது சினிமா பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்துள்ளது. நான் பள்ளி, கல்லூரி காலங்களில் எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் ரகத்தைச் சேர்ந்த பெண் அல்ல. அதேபோல் கலாட்டா செய்யும் பெண்ணும் கிடையாது. அமைதியாக இருப்பேன்.
நான் நடிப்பதற்கு எனது கனவு கதாபாத்திரங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. ஆக்சன் படம், திகில் பேய் படங்களில் நடிக்க வேண்டும். நான் நினைத்ததையெல்லாம் சாதிக்க இன்னும் சினிமாவில் 20 ஆண்டுகள் இருக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.