#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! இறுக்கமான உடையில் செம ஃபிட்டாக நடிகை ராசி கண்ணா! தீயாய் பரவும் ஒர்க் அவுட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கண்ணா. இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ராசி கண்ணா ரசிகர்களுக்கு பரிச்சயமான நாயகியானார்.
அதனைத் தொடர்ந்து அவர் அடங்கமறு, சங்கத்தமிழன் மற்றும் அயோக்யா போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. நடிகை ராசி கண்ணா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக உள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
அதுமட்டுமின்றி ராசி கண்ணா கைவசம் தற்போது துக்ளக் தர்பார், அரண்மனை போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் ராசி கண்ணா அடிக்கடி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவார். அவ்வாறு அவர் ஒர்க் அவுட் செய்ததற்குப் பிறகு செம பிட்டாக எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.