மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. மெட்டி ஒலி விஜி மரணத்திற்கு இதுதான் காரணமா? வெளிவந்த தகவல்! செம ஷாக்கான ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, அனைவராலும் பெருமளவில் விரும்பி பார்க்கப்பட்ட தொடர் மெட்டி ஒலி. இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியுள்ளார். மேலும் அந்த தொடரில் அவர் கோபி என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார்.
கோபி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. மெட்டி ஒலி தொடரில் அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 40 வயதாகும் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று காலமாகியுள்ளார். அவரது மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அவரது மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உமா மகேஸ்வரி சமீப காலமாகவே மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அதற்கு உரிய சிகிச்சை எடுத்து வந்த போதிலும் அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. நடிகை உமா பல சீரியல்கள், மற்றும் படங்களில் நடித்துள்ள நடிகை வனஜாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.