#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கீதா கோவிந்தம் நடிகை ரஷ்மிக்கா மந்தனாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார்!
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மிக்கா மந்தனா. கீதா கோவிந்தம் படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என இவர்க்குக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். குறிப்பாக தமிழில் இவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள்.
இந்நிலையில் தளபதி 63 படத்தில், விஜய்க்கு ஜோடியாக ரேஷ்மிக்கா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், அது வெறும் வதந்தி என்றும் பின்னர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா என அறிவிப்பு வெளியானது.
இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், பல தமிழ் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவருக்கு முன்னுரிமை கோருகிறார்களாம். அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் ரேஷ்மிக்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் வெளியான 24 படத்தை இயக்கிய அதே இயக்குனர் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவுள்ளார். மேலும், இந்த படத்தில் கண்ணழகி ப்ரியா வாரியார் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இதுவரை எந்த அதிகரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.