மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் முடங்கிப் போன திரையுலகம்! ரூ.2000 கோடி நஷ்டம்! ஆர்.கே செல்வமணி வருத்தம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. மேலும் 72 பேருடன் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் திரையுலகம் பெரும் வருத்தத்தில் உள்ளது.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறுகையில், கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. மேலும் தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் சாப்பாட்டிற்கு அவதிப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் பெப்சி தொழிலாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் பலருக்கும் சம்பளம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள படங்கள் வெளியாகாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமா துறைக்கு சுமார் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.