#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுத்திப்போடுங்க.. கத்தரிப்பூ உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த ரோஷினி ஹரிப்பிரியன்..! கண்ணடிக்கும் ரசிகர்கள்..!!
நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவருகிறது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகைகளில் சிலர் சினிமா நடிகைகள் அளவிற்கு பிரபலமானவர்கள். அந்த வகையில் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், "பாரதி கண்ணம்மா" என்ற சீரியலில் நடித்ததன் மூலமாக இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தார்.
மேலும் பல ஆண்களும் இவருக்காக இந்த சீரியலை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர். அந்தளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளார். சீரியல் மூலமாக பல ரசிகர்களை கவர்ந்த நடிகை ரோஷினி திடீரென அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பி வெளியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அப்படி ஒருவாய்ப்பும் கிடைக்காததால், இறுதியில் விஜய்டிவி பக்கமே திரும்பி பல நிகழ்ச்சிகளில் கலந்துவருகிறார். அதேபோல ஒரு பக்கம் வேலை, மறுபக்கம் நல்ல ஆடைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.