மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யின் தந்தை எடுத்துள்ள அதிரடி முடிவு.! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா??
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்குபவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவர் முன்னணி நடிகர் தளபதி விஜய்யின் தந்தையாவார். தமிழில் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அவரது படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் எஸ்.ஏ சந்திரசேகர் பல படங்களில் முக்கிய ரோலிலும் நடித்துள்ளார். மேலும் இறுதியாக எஸ் ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் தொடர் ஒன்றில் முக்கியமான ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.