#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லியோ படத்தை பங்கமாக கலாய்த்த விஜயின் தந்தை.. இணையத்தில் வைரல்!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவருடைய மகன் தான் தளபதி விஜய் என்பது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. சந்திரசேகர் தற்போது வயது மூப்பின் காரணமாக திரைப்படங்களை இயக்குவதில்லை.
அவருடைய மகன் தளபதி விஜய் அரசியல் மற்றும் சினிமாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும், விமர்சன ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு நிகழ்ச்சியில் ஒரு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதில் பேசிய அவர், ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு அந்த படத்தோட இயக்குனரை ஃபோனில் அழைத்து முதல் பாதி சூப்பர் என்றேன். ஒரு படம் எப்படி பண்ண வேண்டும் என்று உங்களிடம் இருந்துதான் சார் கத்துக் கொள்ள வேண்டும் என்று பாராட்டினேன்.
அதேபோல் இரண்டாவது பாதி கொஞ்சம் சரியில்லை சார். அப்படின்னு சொன்னதும் சார் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன் சொன்னாரு. சார் மதங்களில் ஒரு தகப்பனே தனது பிள்ளையை இது போன்ற நம்பிக்கை எல்லாம் கிடையாது சார் என்று சொன்னதும் சார் அப்புறமா கூப்பிடுறேன் சார் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டார். அதுக்கப்புறம் அவர் கூப்பிடுவே இல்லை.
ஆனா படம் ரிலீஸான பிறகு அந்தப் படத்தை எல்லாரும் வச்சு செஞ்சாங்க. நான் சொன்னதை ஆலோசனையாக ஏற்று அதை மாற்றி இருக்கலாம். அதற்கு நேரம் இருந்தது. அந்தப் படத்தைப் பற்றி அத்தனை விமர்சனங்களும் நான் சொன்னதையே சொல்லியது. அவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் தைரியமும் பக்குவம் இல்லை என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் பெயர் குறிப்பிடாமல் பேசி இருந்தது லியோ திரைப்படம் தான் எனவும், அந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.