மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இப்படியொரு நட்பா! நயன்தாராவுடன் செம நெருக்கமாக பிக்பாஸ் பிரபலம்! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சம்யுக்தா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஜித்தன் ரமேஷுடன் ஜோடியாக கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி சம்யுக்தா சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் தோழி என்பது பலரும் அறிந்த விஷயம். மேலும் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டு விக்னேஷ்சிவன் பிறந்தநாளன்று மிகவும் நெருக்கமாக அவர்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.