மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! சாண்டிக்காக நம்ம சித்தப்பு சரவணன் செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா.! ஆச்சரியத்தில் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் 3, 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணன் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றபட்டார்.
தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார்.
மேலும் இதுகுறித்து பிக்பாஸும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சரவணன் சமீபத்தில் மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கலைமாமணி விருதினை தனது குழந்தையுடன் சென்று வாங்கியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் சரவணனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் கவின் மற்றும் சாண்டி. சரவணன் வீட்டை விட்டு வெளியேற்றபட்டதும் அவர்கள் இருவரும் கதறி அழுதனர்.
இந்நிலையில் தற்பொழுது சித்தப்பு சரவணன் சாண்டியின் வீட்டிற்கு சென்று அவரது மகள் லாலாவை பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.